Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

உக்ரைன் தலைநகர் கீவ்-ல் ரஷ்ய படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 4 பேர் உயிரிழப்பு, 10 பேர் படுகாயம்!

கீவ்: உக்ரைன் தலைநகரான கீவ் நகரத்தை குறிவைத்து ரஷ்யா நடத்திய பெரிய அளவிலான வான்வழித் தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டதாகவும், 70-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளார். இந்த தாக்குதலில் கீவ் பகுதிகளில் பல குடியிருப்பு மற்றும் குடியிருப்பு அல்லாத கட்டிடங்கள் சேதமடைந்தன, அவற்றில் ஒரு இருதயவியல் நிறுவனம் அடங்கும்.

இரவு நேரத் தாக்குதல் 12 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததாகக் குறிப்பிட்ட உக்ரைன் உள்துறை அமைச்சர் இஹோர் கிளைமென்கோ, 11 பிராந்தியங்களில் 1,500க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டதாகவும், 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பொருட்கள் சேதமடைந்ததாகவும் கூறினார்.

உக்ரைனின் விமானப்படை, அதன் வான் பாதுகாப்பு 595 ட்ரோன்களில் 568 ஐ சுட்டு வீழ்த்தியதாகவும், 48 பல்வேறு வகையான ஏவுகணைகளில் 43 ஐ சுட்டு வீழ்த்தியதாகவும், இந்த தாக்குதல் கீவ் நகரை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும் உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.