Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உக்ரைனில் முக்கிய அரசு கட்டிடங்கள் மீது ரஷ்யா தாக்குதல்

கீவ்: ரஷ்யா - உக்ரைன் இடையே 3 ஆண்டுகளாக நடந்துவரும் போரை நிறுத்துவதற்கு அமெரிக்கா மேற்கொண்ட அமைதி முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. இந்நிலையில் கீவ் மீது ரஷ்யா மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நேற்று முன்தினம் நடத்தியுள்ளது. சுமார் 800 டிரோன்கள் மூலமாக அடுக்குமாடி கட்டிடங்கள் தாக்கப்பட்டதில் 4 பேர் உயிரிழந்தனர்.

மேலும் முக்கயி அரசு அலுவலக க்ட்டிடங்கள் இந்த தாக்குதலில் சேதமடைந்துள்ளது. ஒரு நூற்றாண்டுக்கு முன் கட்டப்பட்ட மிக பழமைவாய்ந்த அரசு கட்டிடத்தை ரஷ்யா தாக்கியது இதுவே முதல் முறையாகும். தூதர்களுக்கு வழங்கப்பட்ட சுற்றுப்பயணத்தின்போது சேதமடைந்த கட்டிடங்களை அதிகாரிகள் காட்டினார்கள்.