ஐநா: ஐநா பொதுச்சபை கூட்டத்தில், உக்ரைனின் தற்காலிகமாக ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களின் நிலைமை என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. இதில் இந்தியாவுக்கான நிரந்தர தூதர் பர்வதனேனி ஹரிஷ் கலந்து கொண்டார். அப்போது பர்வதனேனி ஹரிஷ் பேசியதாவது: உக்ரைனில் நிலவும் நிலைமை குறித்து இந்தியா தொடர்ந்து கவலை கொண்டுள்ளது. போரில் அப்பாவி உயிர்கள் பலியாவது ஏற்று கொள்ள முடியாதது. இருநாடுகளின் பிரச்னைக்கு போர்க்களத்தில் எந்தவொரு தீர்வையும் காண முடியாது.
உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக எரிபொருள் விலை உயர்வு போன்ற பிரச்னைகளால் உலக நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வளரும் நாடுகள் தங்களை தற்காத்து கொள்ள தனித்து விடப்பட்டுள்ளன. வளரும் நாடுகளின் குரல்களை கேட்பதும், அவர்களின் நியாயமான கோரிக்கைகள் கவனிக்கப்படுவதும் மிகவும் முக்கியம். உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றார்.