Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

உக்ரைன் மக்களை வாட்டி வதைப்பதே ரஷ்யாவின் நோக்கம்: அதிபர் ஜெலன்ஸ்கி வேதனை

உக்ரைன்: குளிர்காலத்தை மையமாக வைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டி உள்ளார். நோட்டா அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக அதன் அண்டை நாடான ரஷ்யா கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர் 3 ஆண்டுகளை கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் இவ்விரு நாடுகளுக்கிடையே நடைபெற்றுவரும் போரை நிறுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் ரஷ்யா உக்ரைன் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை கொண்டு ஒரே இரவில் பெரிய தாக்குதலை நடத்தியதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டனர்.

அத்துடன் எரிசக்தி வசதிகள் உட்பட பொதுமக்களின் உடமைகள் என அனைத்தும் சேதமடைந்தது. இந்த தாக்குதல் குறித்து உக்ரைன் மேயர் கூறுகையில், இந்த தாக்குதலில் உக்ரைனின் தலைநகரான லிவிவில் உள்ள ஒரு தொழிற் பூங்கா தீ பிடித்து எரிந்தது இதனால் நகரத்தில் சில பகுதிகள் மின்சாரம் இல்லாமல் இருந்தன. ஞாயிற்று கிழமை அதிகாலை நடந்த இந்த தாக்குதலால் அதிகாரிகள் பல இடங்களில் ஏற்பட்ட தி விபத்துகளை எதிர்த்து போராடினர். அதுமட்டுமல்லாமல் தலைநகர் லிவிவில் மீது மிக பெரிய போர் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக அவசர சேவை மையம் தெரிவித்தது.

உக்ரைனின் ராணுவ தொழில்துறை வசதிகள் மற்றும் எரிவாயு எரிசக்தி உட்கட்டமைப்பு இரவோடு இரவாக தாக்கியதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருந்தது. குளிர்கால போர் நெருங்கி வருவதாலும் சண்டையை முடிவிற்கு கொண்டுவருவதற்கான ராஜதந்திர முயற்சிகள் தோல்வி அடைந்தாலும் மாஸ்க்கோ உக்ரைன் மீதான தாக்குதல்களை முடுக்கிவிட்டுள்ளது. இந்த ரஷ்யா உடனான போர் குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் ரஷ்யாவின் தொடர் தாக்குதல்களின் நோக்கம் குளிர்காலம் தொடங்குவதற்கு முன்பாக உக்ரைன் மக்களை வாட்டி வதைப்பதே என்று குறிப்பிட்டுள்ளார். ரஷ்யா வெளிப்படையாக தங்கள் நாட்டின் உள்கட்டமைப்பின் மீது தாக்குதல் நடத்தி வருவதாகவும் ஆனால் உலக நாடுகள் மவுனம் காப்பதாகவும் வேதனை தெரிவித்தார்.