மாஸ்கோ: மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நடந்துவரும் போரை முடிவுக்கு கொண்டுவர உக்ரைனுக்கு 3 முக்கிய நிபந்தனைகளை ரஷ்யா அதிபர் புதினுக்கு விடுத்து இருப்பது சரவதேச அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. 1300 நாட்களாக தொடரும் ரஷ்யா, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர ஐநா சபை, ஐரோப்பிய யூனியன் போன்ற அமைப்புகளும், அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளும் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சில தினங்களுக்கு முன்பு புதின், ஜெலன்ஸ்கி ஆகியோரை ட்ரம்ப் சந்தித்து பேசினார். இதன் தொடர்ச்சியாக போர் நிறுத்தம் என்ற இறுதிக்கட்டத்தை நோக்கி ரஷ்யா, உக்ரைன் நகர்ந்துள்ளது. எனினும் போர் நிறுத்தத்திற்கு ரஷ்யா தரப்பில் வைக்கப்பட்ட கட்டுப்பாடுகளை உக்ரைன் நிராகரித்தது.
ரஷ்யா கைப்பற்றிய இடங்களை விட்டுத்தர முடியாது, நேட்டோ அமைப்பு இணைவது தடுக்க முடியாது, போன்ற உக்ரைனின் பதில்கள் ரஷ்யாவை அதிருப்தி அடைய செய்தது. இதற்கு எதிர் வினையாக உக்ரைன் மீது மீண்டும் தாக்குதலை ரஷ்யா உக்கிரமாக தொடங்கியுள்ளது. இந்நிலையில் தான் நேட்டோ அமைப்பு இணையும் முடிவை கைவிட வேண்டும், டொன்பாஸ் பிராந்தியத்தை விட்டுக்கொடுக்க வேண்டும். உக்ரைனில் இருக்கும் மேற்கிந்திய படைகளை திருப்பி அனுப்பவேண்டும். போர் நிறுத்தத்திற்கு 3 நிபந்தனைகளை ரஷ்யா விதித்துள்ளது. ஏற்கனவே பாஸ்கோவில் அமைதி பேர்ச்சுவார்தை நடத்தும் ரஷ்யாவின் யோசனையை உக்ரைன் நிராகரித்த நிலையில், புதினின் நிபந்தனைளை ஏற்குமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.