லண்டன்: இங்கிலாந்தின் கலாச்சாரம், ஊடகம் மற்றும் விளையாட்டுக்கான அமைச்சராக இருப்பவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த லிசா நந்தி. இவர் இங்கிலாந்தின் புதிய கால்பந்து கண்காணிப்பு குழுவை நியமிக்கும்போது நாட்டின் பொது நியமன விதிகளை தெரியாமல் மீறியுள்ளார். கால்பந்து கட்டுப்பாட்டாளர் பதவிக்கு டேவின் கோகைனை பரிந்துரைக்கும்போது அவர் தொழிலாளர் கட்சிக்கு 2 முறை நன்கொடை அளித்ததாக உடனடியாக அறிவிக்க தவறியதாக தெரிகின்றது. இந்த செயல்பாடானது பொது நியமனங்களுக்கான விதிமுறைகளை மீறியதாகும் என பொது நியமனங்களுக்கான ஆணையர் சர் வில்லியம் ஷாக்ராஸ் கண்டறிந்து அறிக்கை அளித்துள்ளார். இதையடுத்து அமைச்சர் லிசா நந்தி பிரதமர் கெய்ர் ஸ்டாமரிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
+
Advertisement

