இந்தியாவின் முன்னணி ஹாக்கி விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்கினார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
டெல்லி: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் புதுடெல்லியில் ஹாக்கி இந்தியா நூற்றாண்டு விழாவினையொட்டி நடைபெற்ற காட்சிப் போட்டியில் பங்கேற்ற இந்தியாவின் முன்னணி ஹாக்கி விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
முன்னதாக, ஹாக்கி இந்தியா நூற்றாண்டு விழாவினையொட்டி அமைக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சியில், இந்திய ஹாக்கி அணி பல்வேறு ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்ற தருணங்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க புகைப்படங்களை பார்வையிட்டு, ஹாக்கி இந்தியா நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் (5.11.2025) அன்று சென்னை தலைமைச் செயலகத்தில், அறிமுகப்படுத்திய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஹாக்கி இந்தியா இணைந்து நடத்தும் 14-வது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக்கோப்பைப் போட்டிக்கான வெற்றி கோப்பை, அதன் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இன்று புதுடெல்லியில் நடைபெற்ற ஹாக்கி இந்தியா நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் காட்சிப் படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
புதுடெல்லியில் நடைபெற்ற ஹாக்கி இந்தியாவின் 100வது ஆண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன், அங்கு வரவிருக்கும் ஹாக்கி ஆண்கள் ஜூனியர் உலகக் கோப்பைக்கான கோப்பை அறிமுகப்படுத்தப்பட்டது.
ஹாக்கியின் வளர்ச்சிக்கு தமிழக அரசின் பங்களிப்பை நான் எடுத்துரைத்தேன், மேலும் இந்தியா உலகின் முன்னணி ஹாக்கி வீராங்கனையாக இருக்க தொடர்ந்து முயற்சித்து வரும் ஹாக்கி இந்தியாவை வாழ்த்தினேன்.

