சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் தொகுதிவாரியாக திமுக நிர்வாகிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திக்கிறார். சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள ஆளுங்கட்சியான திமுக முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக நம் மண் மொழி மானம் காக்க, “ஓரணியில் தமிழ்நாடு” எனும் மாபெரும் முன்னெடுப்பை திமுக தொடங்கியுள்ளது. இந்த ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பை திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் கடந்த 1ம் தேதி தொடங்கி வைத்தார். தொடர்ந்து 3ம் தேதி முதல் வீடு, வீடாக சென்று புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதலமைச்சர் ஸ்டாலின் கரங்களை வலுப்படுத்தும் நோக்கில் துணை முதலமைச்சர் உதயநிதி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பில் சிறப்பாக செயல்பட்ட திமுகவினரை கவுரவிக்கிறார். தமிழ்நாடு முழுவதும் திமுக தொண்டர்கள் நிர்வாகிகளை சந்தித்து துணை முதல்வர் உதயநிதி ஊக்கப்படுத்துகிறார். இன்று மாலை காஞ்சிபுரம் தொகுதியில் உள்ள ஒன்றிய, நகர, பேரூர், நிர்வாகிகளுடன் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்கிறார்.
தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரங்களை வலுப்படுத்தும் நோக்கத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சென்று கழக உடன்பிறப்புகளை சந்தித்து ஊக்கப்படுத்துகிறார். இந்த சுற்றுப்பயணத்தில் உதயநிதி ஸ்டாலின் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பில் சிறப்பாக செயல்பட்ட கழகத் தொண்டர்களை கௌரவிக்கிறார், தன்னார்வலர்களோடு கலந்துரையாட உள்ளார்