புதுடெல்லி: மாநிலங்களவையில் ஒன்றிய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கிஞ்சரபு ராம்மோகன் நாயுடு கூறுகையில்,’ உடான் திட்டம் மூலம் கிட்டத்தட்ட 1.5 கோடி மக்களுக்கு நாங்கள் விமானபோக்குவரத்து பலன்களை வழங்கியுள்ளோம். அடுத்த 10 ஆண்டுகளில் மேலும் 4 கோடி பேரை இணைத்து 120 புதிய இடங்களை இணைக்க உள்ளோம்’ என்றார்.
இந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை உள்ள ஸ்மார்ட் நகரங்கள் திட்டத்தின் கீழ் இதுவரை 7,400 க்கும் மேற்பட்ட திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன என்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சர் மனோகர் லால் கட்டார் தெரிவித்தார்.