ஹனோய்: வியட்நாமை புவலாய் சூறாவளி தாக்கியது. வியட்நாம் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டோடியது. வீடுகள், பள்ளிகள், அரசு அலுவலக கட்டிடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பல மாகாணங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்தன. காற்றின் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் மேற்கூரைகள் சேதமடைந்து உடைந்து விழுந்தன. புயல் மற்றும் மழை காரணமாக ஏற்பட்ட சம்பவங்களில் சுமார் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 17 மீனவர்கள் மாயமான நிலையில் மீட்பு குழுவினர் அவர்களை தேடி வருகின்றனர்.
+
Advertisement