நெல்லை: நெல்லை தச்சநல்லூர் பகுதியில் போலீசார் ரோந்து பணியின்போது ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த அருண்குமார் மற்றும் ஊருடையார்புரத்தைச் சேர்ந்த ஹரிஹரன் ஆகிய இருவரிடம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது போலீசாரை அரிவாளால் வெட்ட முயன்றதால் கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதைறிந்த ஹரிகரனின் தம்பி அஜித்குமார், கூட்டாளிகளுடன் சேர்ந்து தச்சநல்லூர் காவல் நிலையம், கரையிருப்பு சோதனைச் சாவடி, சிதம்பரநகர் விலக்கு மற்றும் தென்கலம் அனுகு சாலை சந்திப்பு ஆகிய 4 இடங்களில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு தப்பினார்.
இதுதொடர்பாக சரண் என்பவரை தச்சநல்லூர் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்நிலையில் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக நெல்லை மாவட்ட போலீசார் ராஜவல்லிபுரத்தை சேர்ந்த அஜித்குமார்(30), பெருமாள்(27) ஆகிய இரண்டு பேரை நேற்று கைது செய்தனர். மேலும் 5 பேரை தேடி வருகின்றனர்.