Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பட்டாபிராமில் நாட்டு வெடி வெடித்ததில் 4 பேர் உயிரிழந்த சம்பவத்தில் மேலும் இருவர் கைது!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் நாட்டு வெடி வெடித்ததில் 4 பேர் உயிரிழந்த சம்பவத்தில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோயில் திருவிழா, துக்க நிகழ்வுகளுக்கு நாட்டுப் பட்டாசுகளை வியாபாரம் செய்யும் கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரும், அவரிடம் பட்டாசுகள் வாங்கி விற்பவருமான தாமோதிரன் என்பவரும் கைது செய்யப்பட்டனர்.