வத்தலக்குண்டு: திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே விருவீடு தெப்பத்துப்பட்டியை சேர்ந்தவர் காத்தவராயன் (65). விவசாயி. மனைவி ஜோதி (60). இவர்களது பேரன் ஆச்சிபாண்டி (11), பேத்தி ஆச்சியம்மாள் (9). இவர்கள் 4 பேரும் நேற்று டூவீலரில் விருவீடு சென்று மளிகை பொருட்கள் வாங்கி கொண்டு திரும்பி கொண்டிருந்தனர். சாந்திபுரம் விலக்கு அருகே, மண் ஏற்றிய டிப்பர் லாரி இவர்களது டூவீலர் மீது மோதியது.
இதில் காத்தவராயன், ஆச்சியம்மாள்,ஜோதி ஆகியோர் பலியாகினர். படுகாயமடைந்த ஆச்சிபாண்டிக்கு வத்தலக்குண்டு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து விளாம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து லாரி டிரைவரை தேடி வருகின்றனர். டூவீலர் விபத்தில் தாத்தா, பாட்டி, பேத்தி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


