மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், கோழியாளம் கிராமத்தில் இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள் விழா நேற்று முன்தினம் விசிக சார்பில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக செங்கல்பட்டு மேற்கு மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் பொன்னிவளவன், செங்கல்பட்டு தெற்கு மாவட்டச் செயலாளர் தமிழினி, முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் விடுதலை செழியன், ஆதவன் ஆகியோர் கலந்துகொண்டு இரட்டைமலை சீனிவாசன் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதில் ஒன்றியச் செயலாளர் தயாநிதி, விசிக நிர்வாகிகள் கலைகதிரவன், வெள்ளபுத்தூர் விஜயகுமார், பாக்கம் பேரறிவாளன், பன்னீர்செல்வம், கதிர்வாணன், முகிலன், கிட்டு பிரபாகரன், சமத்துவன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Advertisement