டிவிஎஸ் நிறுவனம், ரைடர் மோட்டார் சைக்கிளை முதன் முதலாக 2021 செப்டம்பர் 16ம் தேதி அறிமுகம் செய்தது. கடந்த 16ம் தேதியுடன் 4 ஆண்டுகளை இது முழுமையாக நிறைவு செய்துள்ளது. 4வது ஆண்டில் புதிய மைல்கல்லாக 16 லட்சத்தை தாண்டி விற்பனையாகியுள்ளது. அதாவது, 4 ஆண்டுகளில் 16,04,355 ரைடர் மோட்டார் சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதில் உள்நாட்டில் விற்பனையான 13.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பைக்குகளும் மற்றும் ஏற்றுமதி செய்யப்பட்ட 2.45 லட்சத்துக்கும் மேற்பட்ட பைக்குகளும் அடங்கும். மேலும் நடப்பு ஆண்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் வரை விற்பனையான டிவிஎஸ் மோட்டார் சைக்கிள்கள் எண்ணிக்கையில் 39 சதவீதத்தை இது பிடித்துள்ளது. புதிய ஜிஎஸ்டி சீர்திருத்தத்தின்படி, இது 28 சதவீத வரிப்பிரிவில் இருந்து 18 சதவீத வரிப்பிரிவுக்கு மாற்றப்படுகிறது.