டிவிஎஸ் நிறுவனம், ஐகியூப், டிவிஎஸ் எக்ஸ் என 2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை சந்தைப்படுத்தியுள்ளது. இந்த வரிசையில் 3வதாக ஆர்பிட்டர் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இதில் 3.1 கிலோவாட் அவர் பேட்டரி இடம் பெற்றுள்ளது.
முழுமையாக சார்ஜ் செய்தால் 158 கி.மீ தூரம் வரை செல்லலாம் என நிறுவன தரப்பில் கூறப்படுகிறது. அதிகபட்சமாக மணிக்கு 68 கி.மீ வேகம் வரை செல்லும். நீளமான சீட், விபத்து ஏற்பட்டால் அவசர தகவல் அனுப்பும் தொழில்நுட்பம், ஹில் ஹோல்ட் அசிஸ்ட், குரூஸ் கண்ட்ரோல், புளூடூத் இணைப்பு வசதியுடன் கூடிய எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளது. டிவிஎஸ் ஸ்மார்ட் கனெக்ட் உடன் இணைத்து பயன்படுத்தலாம்.
எல்இடி லைட் இடம் பெற்றுள்ளது. 14 அங்குல முன்புற வீல்கள் உள்ளன. சீட்டுக்கு அடியில் 34 லிட்டர் கொள்ளளவு கொண்ட இடவசதி உள்ளது. 2 ஹெல்மெட்களை இதில் வைத்துக் கொள்ளலாம். ஷோரூம் விலை சுமார் ரூ.99,900 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.