மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸ் நிறுவனம், கேப்டன் அமெரிக்கா என்ற திரைப்படத்தை தயாரித்திருந்தது. இந்த படத்தின் மார்வெல் சூப்பர் ஹீரோக்களை அடிப்படையாகக் கொண்டு சூப்பர் சோல்ஜர் எடிசன் வேரியண்ட்களை டிவிஎஸ் நிறுவனம் செய்து வருகிறது. இந்த தீம் அடிப்படையில் 2020ம் ஆண்டு முதல் ஸ்கூட்டர் அறிமுகமானது. தற்போது கேமோ ஸ்டைல் கிராபிக்ஸ் உடன் புதிய ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப ரீதியாக எந்த மாற்றமும் இல்லை. இதில் 124.8 சிசி ஏர் கூல்டு இன்ஜின் இடம்பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 9.5 எச்பி பவரையும், 10.5 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். புளூடூத் இணைப்பு வசதி, முழுமையான டிஜிட்டல் டிஸ்ப்ளே உட்பட பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த ஸ்கூட்டர் ரேஸ் எடிசன் மற்றும் ரேஸ் எக்ஸ்பி ஆகியவற்றுக்கு இடைப்பட்டதாக இருக்கும் என நிறுவனத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.ஷோரூம் விலை சுமார் ரூ.98,117.