டிவிஎஸ் நிறுவனம், அப்பாச்சி மோட்டார் சைக்கிள்களை அறிமுகம் செய்து 20 ஆண்டுகள் ஆனதையொட்டி, அப்பாச்சி ஆர்டிஆர் 160, 180, 200 மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 மற்றும் ஆர்டிஆர் 310 ஆகியவற்றின் ஸ்பெஷல் எடிஷன்களை அறிமுகம் செய்துள்ளது. ஆர்டிஆர் 160-ல் 159.6 சிசி 4 ஸ்டிரோக் ஏர் கூல்டு இன்ஜின் உள்ளது. இதுஏபுால் ஆர்டிஆர் 160 4வி-யில் ஆயில் கூல்டு இன்ஜின் , ஆர்டிஆர் 1800ல் 177.4 சிசி ஆர்டிஆர் 200 4வி-ல் 197.75 சிசி இன்ஜின், ஆர்டிஆர் 310 மற்றும் ஆர்ஆர் 310ல் 312.12 சசி இன்ஜின்கள் இடம் பெற்றுள்ளன.
ஸ்பெஷல் எடிஷன்கள் பிரத்யேக கருப்பு மற்றும் ஷாப்பெயின் கோல்டு டூயல் வண்ணம் மற்றும் கருப்பு, கோல்டு டூயல் டோன் அலாய் வீல்களும் இடம் பெற்றுள்ளன. அப்பாச்சி வரிசையில் முதல் முறையாக யுஎஸ்பி சார்ஜிங் வசதி, புதிய கிளாஸ் டி புரோஜெக்டர் ஹெட்லாம்ப், எல்இடி டிஆர்எ்கள், 5 அங்குல டிஎப்டி கிளஸ்டர், புளூடூத் இணைப்பு வசதி, டிராக்ஷன் கண்ட்ரோல், அசிஸ்ட் மற்றும் சிலிப்பர் கிளட்ச் போன்றவை இடம் பெற்றுள்ளன. வேரியண்டுக்கு ஏற்ப வண்ணம், அம்சங்கள் மாறுபடலாம். ஷோரூம் விலையாக ஆர்டிஆர்160 4வி பிளாக் எடிஷன் சுமார் ரூ.1,28,490 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டாப் வேரியண்ட் சுமார் ரூ.1,53,990. லிமிடெட் அனிவர்சரி எடிஷன் ஆர்டிஆர் 160 சுமார் ரூ.1,37,990, ஆர்டிஆர் 180 சுமார் ரூ.1,39,990, ஆர்டிஆர் 160 4வி ரூ.1,50,990, ஆர்டிஆர் 200 4வி ரூ.1,62,990, ஆர்டிஆர் 310 ரூ.3,11,000, ஆர்ஆர் 310 ரூ.3,37,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.