நெல்லை: நெல்லையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ இன்று அளித்த பேட்டி:- நான் டெல்லி சென்றது கட்சி நிர்வாகிகள் யாரையும் சந்திப்பதற்காக அல்ல. எனது சொந்த வேலை காரணமாகவே டெல்லி சென்று வந்துள்ளேன். இதில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை. செங்கோட்டையன் தவெகவில் இணைந்துள்ளது அதிமுக-பாஜக கூட்டணிக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதிமுக தனக்கென வாக்கு வங்கியை கொண்டுள்ள பெரிய கட்சி. தம்பி விஜய், தவெகவை ஆரம்பித்ததும் முதல்வராக வேண்டும் என நினைக்கிறார். அது சாத்தியம் இல்லை. எம்ஜிஆர் நடிகராக இருக்கும்போதே கட்சி பணியாற்றி அதன்பிறகு கட்சியை தொடங்கி முதலமைச்சர் ஆனார்.
இந்தாண்டு பொங்கலுக்கு ெபாதுமக்களுக்கு அரசு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். முதல்வர் இதனை செய்து கொடுப்பார் என நினைக்கிறேன். எனது தொகுதிக்கு பல்வேறு திட்டங்களை முதல்வர் நிறைவேற்றி தந்துள்ளார். தம்பி விஜய் தற்போதுதான் கட்சியை தொடங்கி உள்ளார். அதற்குள் லாங் ஜம்ப், ைஹ ஜம்ப் தாண்ட வேண்டும் என்றால் அது சாத்தியமாகாது. செங்கோட்டையனை பாஜ இயக்குவதாக இருந்தால் அவர் ஏன் தவெகவில் இணைய வேண்டும். அதிமுக உள்கட்சி பிரச்சனையை பேசுவது நியாயமாக இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

