மேட்டுப்பாளையம்: தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்னும் தலைப்பில் பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக நேற்று மேட்டுப்பாளையம் பகுதிக்கு வந்தார். முன்னதாக காரமடை ரங்கநாதர் கோயிலில் நயினார் நாகேந்திரன் வழிபாடு செய்தார். அப்போது பேட்டியளித்த அவரிடம் தவெக பொதுக்குழுவில், விஜய் தலைமையில் தான் தவெக தேர்தலை சந்திக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது உங்கள் அணிக்கு பின்னடைவா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நயினார் நாகேந்திரன், தவெக முடிவால் அதிமுக, பாஜ கூட்டணிக்கு எந்த பின்னடைவும் பாதிப்பும் இல்லை. வரும் சட்டமன்ற தேர்தலில் எங்களது தேஜ கூட்டணி தான் வெற்றி பெறும் என்றார்.
+
Advertisement
