திருப்பரங்குன்றம்: தவெகவுக்கு நாங்கள் என்ன மார்க்கெட்டிங் அதிகாரிகளா என அண்ணாமலை காட்டமாக பதிலளித்தார். சென்னையிலிருந்து விமானம் மூலம் நேற்று மதுரை வந்த பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையிடம் நிருபர்கள், சீமான் குறித்து கேட்டதை விஜய் குறித்துக் கேட்பதாக தவறாக புரிந்து கொண்ட அண்ணாமலை, ‘‘இதுகுறித்து விஜய்யிடம் கேளுங்கள். அவரைத் தவிர அனைவருமே பேசுகிறார்கள். தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளிடம் கேளுங்கள். நாங்கள் என்ன அவர்களுக்கு மார்க்கெட்டிங் ஆபீசர்களா? நீங்கள் தைரியம் இருந்தால் விஜய் அல்லது அவர்களின் பேச்சாளர்களிடம் கேட்க வேண்டும். சும்மா எங்களையே நொச்சி நொச்சிணு... எங்களிடம் ஏன் மதுரை, சென்னை என அனைத்து இடங்களிலும் இதையே நொச்சுறீங்க. சொல்ல வேண்டிய எனது கருத்துக்களை சொல்லிவிட்டேன். சம்பந்தப்பட்ட மனிதர்கள் மற்றும் கட்சியினரிடம் தான் கேட்க வேண்டும்’’ என்றார். ஒன்றிய குழு குறித்து முதலமைச்சர் கூறியது குறித்த கேள்விக்கு, ‘‘முதல்வர் கூறியது குறித்து நான் பேசுகிறேன்’’ என்றார்.
+
Advertisement