சென்னை: தவெக தலைவர் நேற்று நடிகர் விஜய் வெளியிட்ட அறிக்கை: மதுரையில் தவெக 2வது மாநில மாநாட்டின் வெற்றி என்பது, உங்கள் ஒவ்வொருவரின் உழைப்பிலும், பங்களிப்பிலும் மட்டுமே சாத்தியமாகி இருக்கிறது. மதுரையில் கடல் புகுந்தது போல் இருந்தது. செயல்மொழிதான் நமது அரசியலுக்கான தாய்மொழி’ என்று கூறியுள்ளார்.
மேலும், மாநாடு நடத்த உறுதுணையாக இருந்த தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், கூடுதல் செயலாளர்கள், பொருளாளர், துணை பொதுச்செயலாளர், தலைமை நிலைய செயலாளர், மதுரை மாவட்ட செயலாளர்கள், மாநாட்டு ஒருங்கிணைப்பு குழு, மருத்துவ குழு, ரசிகர்கள், கட்சி தொண்டர்களுக்கு நன்றி. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.