Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அன்றாட பணிகளை ஒருங்கிணைக்க தவெக புதிய நிர்வாக குழு அறிவிப்பு

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் அன்றாடப் பணிகளையும் செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க, புதியதாக நிர்வாகக் குழு ஒன்றை அக்கட்சியின் தலைவர் விஜய் நியமித்துள்ளார். இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளவர்களின் பெயர்களும் வெளியிடப்பட்டுள்ளன. அதன் விவரம்: ஆனந்த் பொதுச்செயலாளர், ஆதவ் அர்ஜுனா தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர், அருண்ராஜ் கொள்கை பரப்புப் பொதுச் செயலாளர், நிர்மல் குமார் இணைப் பொதுச்செயலாளர், ராஜ்மோகன், துணைப் பொதுச்செயலாளர். இதுதவிர மாவட்ட வாரியாக மொத்தம் 28 நிர்வாக குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.