அஜர்பைஜான் - ஜார்ஜியா எல்லையில் துருக்கி ராணுவத்தின் சரக்கு விமானம் விழுந்து நொறுங்கியது. அஜர்பைஜானில் இருந்து துருக்கி புறப்பட்ட சி-130 ரக ராணுவ விமானம் திடீரென விழுந்து நொறுங்கியது. சரக்கு விமானத்தில் பயணித்த 20 பேரின் நிலைமை என்ன என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை. நடுவானில் புகையை கக்கியபடி பலமுறை சுழன்று கீழே விழுந்து சரக்கு விமானம் நொறுங்கியது. சரக்கு விமானம் விழுந்த இடத்தில் மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக துருக்கி அதிபர் தகவல் தெரிவித்துள்ளார்.
+
Advertisement
