அங்காரா: துருக்கியில் ராணுவத்துக்கு சொந்தமான சரக்கு விமானம் விபத்துக்குள்ளானது. அசர்பைஜான் -ஜார்ஜியா எல்லைப்பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அஜர்பைஜான் மற்றும் ஜார்ஜியா அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து விமானத்தை தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சி-130 விமானம் அஜர்பைஜானில் இருந்து புறப்பட்டு துருக்கி திரும்பிக்கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கியுள்ளது. இதில் 20 பேர் பலியாகி விட்டனர்.
+
Advertisement
