ஊட்டி: மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், டியூஷன் ஆசிரியையின் கணவருக்கு ஊட்டி மகிளா நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. கோவை மாவட்டத்தை சேர்ந்த ஒரு மாணவி, பிளஸ்-2 படிக்கும் போது ஒரு ஆசிரியையிடம் டியூஷன் சென்று வந்தார். அந்த ஆசிரியையின் கணவர் அக்சித் (27) மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து மாணவியின் பெற்றோர் அவரை கோத்தகிரியில் உள்ள சித்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு தங்கி இருந்த மாணவி திடீரென மாயமானார். இதுகுறித்து 2022ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி, மாணவியின் பெற்றோர் கோத்தகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து மாணவி மற்றும் அக்சித் இருவரையும் கோவையில் மீட்டனர். இதையடுத்து அக்சித் 2022 டிசம்பர் 16ம் தேதி கைது செய்யப்பட்டார். ஊட்டி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் நீதிபதி செந்தில்குமார் அக்சித்துக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.