சென்னையில் உள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் இல்லத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்திப்பு
சென்னை: சென்னையில் உள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் இல்லத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்து பேசினார். இருவரும் ஒரு மணி நேரத்துக்கு மேலாக ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டுமென செங்கோட்டையன் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் சந்திப்பு நடந்துள்ளது. ஏற்கனவே பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையும் தினகரனை சந்தித்து பேசியிருந்தார்.