Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எலான் மஸ்க்குடனான மோதலுக்கு இடையில் ‘டிரம்ப் மிகப்பெரிய குற்றவாளி’: ‘க்ராக்’ வெளியிட்ட பதிவால் சர்ச்சை

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்பின் நெருங்கிய நண்பரான பிரபல தொழிலதிபரும் ‘க்ராக்’ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் தலைவருமான எலான் மஸ்க் இடையே பிரச்னைகள் இருந்து வருகிறது. கேட்கும் தகவல்களை கொடுக்கும் ‘க்ராக்’ செயற்கை நுண்ணறிவு, சர்ச்சைக்குரிய பல தகவல்களை வெளியிட்டு பலமுறை சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. இந்த நிலையில், க்ராக் எக்ஸ் தளத்தில் தற்காலிகமாக முடக்கப்பட்டு, பின்னர் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தபோது, முன்னுக்குப் பின் முரணான தகவல்களை வெளியிட்டு பெரும் குழப்பத்தை உண்டாக்கியது. தனது முடக்கம் குறித்த புகைப்படம் போலியானது என்றும், வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பதிவிட்டதால் முடக்கப்பட்டதாகவும், காசாவில் இஸ்ரேலும் அமெரிக்காவும் இனப்படுகொலை செய்வதாகக் கூறியதால் கணக்கு முடக்கப்பட்டதாகவும் வெவ்வேறு பதில்களை அளித்தது.

சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம், வாஷிங்டனில் குற்றச்செயல்கள் கட்டுப்பாட்டை மீறி சென்றுவிட்டதாக கூறியதோடு, நகர காவல்துறையை தேசிய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து தேசிய பாதுகாப்புப் படையினரைக் களமிறக்கத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்தார். இதுதொடர்பாக க்ராக்கிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, வாஷிங்டன் நகரின் ‘மிகப்பெரிய குற்றவாளி’ அதிபர் டொனால்ட் டிரம்ப் தான் என்று அறிவித்துள்ளது. வர்த்தகப் பதிவுகளில் முறைகேடு செய்ததற்காக நியூயார்க்கில் 34 குற்றச்சாட்டுகளில் டிரம்ப் தண்டனை பெற்றது, அவரை நகரின் மிக மோசமான குற்றவாளியாக ஆக்குகிறது என்று க்ராக் மீண்டும் மீண்டும் கூறியது. டிரம்ப்பிற்கும் மஸ்க்கிற்கும் இடையே அண்மையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளுக்குப் பிறகு இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இறுதியில் எலான் மஸ்க், ‘இந்த பதிவு முட்டாள்தனமான பிழை’ என்றும், எக்ஸ் மற்றும் எக்ஸ்ஏஐ நிறுவனங்களுக்கு இடையேயான உள் புரிதலில் ஏற்பட்ட குழப்பமே இதற்குக் காரணம் என்றும் கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.