அமராவதி: அமெரிக்க அதிபர் டிரம்பின் வரியால் ஆந்திராவில் இருந்து இறால் ஏற்றுமதி ரூ.25,000 கோடிக்கு பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் இறால் கொள்முதல் ஆர்டர்களில் 50%ஐ ரத்துசெய்துவிட்டதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் இறாலில் 80% ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.டிரம்ப் அறிவித்த 50% வரியுடன் சேர்த்து ஏற்றுமதி இறால் மீதான அமெரிக்க வரி 59.72%ஆக உயர்ந்துவிட்டது. இறால் தவிர ரூ.21,246 கோடி மதிப்பிலான மீன்கள் 6 உள்ளிட்ட இதர கடலுணவு ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆந்திர இறால் ஏற்றுமதிக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை குறைக்க ஓன்றிய அரசு நடவடிக்கை எடுக்க சந்திரபாபு கோரிக்கை விடுத்துள்ளார்.
+
Advertisement