Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ட்ரம்ப் விதித்த வரிகள் சட்டவிரோதமானவை: அமெரிக்கா நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

வாஷிங்டன்: அமெரிக்கா நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இன்றி அதிக வரிகளை விதித்த அதிபர் ட்ரம்பின் உத்தரவுகள் சட்ட விரோதமானவை. கூடுதல் வரிவிதிப்பு நிக்க வேண்டும் என்று மேல்முறையீட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது. இந்த நிலையில், நீதிமன்ற தீர்ப்பை சாடும் வகையில் ட்ரம்ப் பேசி இருக்கிறார். அமெரிக்கா பொருட்களுக்கு அதிக வரிவிதிக்கும் நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரிவிதிப்பு கொள்கையை அமெரிக்கா கடைபிடிக்கும் என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார். கனடா, மெக்சிகோ உட்பட உலகில் பல்வேறு நாடுகளுக்கும் கடும் இறக்குமதி வரிகளை விதித்துள்ளார் ட்ரம்ப்.

தனது இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சீனா மீதான வரியை ட்ரம்ப் பல மடங்கு உயர்த்தினார். பின்னர் சீனாவுடன் ஏற்பட்ட பேச்சு வார்த்தையில் குறைக்கப்பட்டது. இந்தியா பொருட்களுக்கும் 50% வரி விதிக்கப்பட்டது. இதற்கிடையே அதிபர் ட்ரம்பின் வரிவிதிப்பு முடிவுகளுக்கு எதிராக நியூயார்க் வர்த்தக நீதிமன்றம் கடந்த மே மாதம் உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து அமெரிக்க கூட்டாட்சி மேல்முறையீடு நீதிமன்றதில் அமெரிக்கா அரசு மேல்முறையீடு செய்து இருந்தது. இந்த நிலையில், மேல் முறையிட்டு நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியது.

அமெரிக்கா நாடாளுமன்றத்தில் ஒப்புதல் இன்றி பல்வேறு நாடுகள் மீது அதிக வரிகளை விதித்த அதிபர் ட்ரம்பபின் உத்தரவுகள் சட்ட விரோதமானவை என்று மேல் முறையிட்டு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கூடுதல் வரிவிதிப்பை நிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. ட்ரம்ப் அரசும் மேல்முறையீடு செய்ய அக்டோபர் 14ஆம் தேதி வரை அவகாசமும் தரப்பட்டது. அடிப்படையில் வரிவிதிப்பு என்பது அமெரிக்கா காங்கிரஸின் அதிகாரத்துக்கு உட்பட்டது. வரிவிதிப்பில் அதிபருக்கு சில அதிகாரங்கள் மட்டுமே நாடாளுமன்றம் வழங்கியுள்ளது. வரம்பற்ற அதிகாரத்தை அதிபருக்கு காங்கிரஸ் வழங்கவில்லை.

அத்தகை நோக்கத்தை காங்கிரஸ் கொண்டு இருக்க வில்லை இதை நினைவில் கொள்ள வேண்டும். உலகில் உள்ள ஒவ்வரு நாட்டுக்கு எதிராகவும் அதிபர் ட்ரம்ப் அதிக வரிகளை விதித்துள்ளார். இதை நியாயப்படுத்தவே தேசிய அவசர நிலைய அறிவிக்கப்பட்டுள்ளது. ட்ரம்பின் பெரும்பாலான வரிவிதிப்புகள் சட்ட விரோதமானவை எனவே கூடுதல் வரிவிதிப்பை நீக்க வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டது. இது குறித்து தற்போது ட்ரம்ப் நீதிமன்ற தீர்ப்பை கடுமையாக சாடியுள்ளார். வரிகள் இல்லாமல் நாடு முற்றிலும் அளிக்கப்படும் அது ராணுவ சக்தி உடனடியாக அளிக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார்.

மேலும் தீவிர இடதுசாரி நீதிபதிகள் குழு என்றும் அவர் விமர்சித்து இருக்கிறார். கட்டடங்களும் நாம் ஏற்கனவே பெற்றுள்ள டிரில்லியன் கணக்கான டல்லோர்களும் இல்லாவிட்டால் நமது நாடு முற்றிலுமாக அளிக்கப்படும். தீவிர இடதுசாரி நீதிபதிகள் குழுவை பொருட்படுத்தவில்லை எனவும் விமர்சித்தார். என்ன நடந்தாலும் ட்ரம்ப் தனது வரிவிதிப்பு கொள்கையில் இருந்து பின்வாங்குவது இல்லை என்றும் முடிவில் இருக்கிறார் என்பதை இதன் மூலமாகவே அறிந்துகொள்ள முடியும்.