நியூயார்க்: நியூயார்க் மேயர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சோரன் மம்தானி வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக இருந்தவர் எரிக் ஆடம்ஸ். இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவர் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்தார். அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் பதவிக்கு ஜனநாயகக் கட்சியின் சார்பாக இந்திய வம்சாவளியான ஸோரான் மம்தானி (வயது 34), குடியரசுக் கட்சியின் சார்பாக கர்டிஸ் ஸ்லிவா, முன்னாள் கவர்னர் ஆண்ட்ரூ குவோமோ ஆகியோர் போட்டியிட்டனர்.
இதனையடுத்து புதிய மேயரை தேர்வு செய்யும் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோஹ்ரான் மம்தானியும், குடியரசு கட்சி வேட்பாளர் கர்டிஸ் ஸ்லிவாவும் முன்னிலை வகித்து வந்தனர். மிகப்பெரிய நகரங்களுள் ஒன்றான நியூயார்க் மேயர் தேர்தல் அமெரிக்க அரசியலிலும் பிரதிபலிக்கும் என்பதால் இது பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த தேர்தலில் அமெரிக்க குடியரசு தலைவர் டிரம்பை கடுமையாக விமர்சித்து வரும் மம்தானியே வெற்றி பெறுவார் என கருத்து கணிப்புகள் தெரிவித்திருந்தன.
ஆனால் டிரம்ப் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். நியூயார்க் மேயராக மம்தானி வென்றால் நியூயார்க் பொருளாதார, சமூக பேரழிவு ஏற்பட்டு நிலைமை மோசமாகி விடும். இதனால் நியூயார்க் நகரத்துக்கு அதிக நிதி ஒதுக்க முடியாது என்று டிரம்ப் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் மேயர் பதவிக்கான தேர்தலில் ஆளுங்கட்சி வேட்பாளரை வீழ்த்தி ஜனநாயக கட்சியின் ஜோஹ்ரான் மம்தானி அபார வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகர முதல் முஸ்லீம் மேயர் மற்றும் முதல் இந்திய வம்சாவளி மேயர் என்ற பெருமையை ஜோஹ்ரான் மம்தானி பெற்றுள்ளார்.
யார் இந்த ஜோஹ்ரான் மம்தானி?
*உகாண்டாவில் பிறந்து, தென் ஆப்பிரிக்காவில் பள்ளி படிப்பை படித்து நியூயார்க் நகரில் வளர்ந்தவர்.
*இந்திய – அமெரிக்க திரைப்பட இயக்குநர் மீரா நாயரின் மகன். இவரது தந்தை கொலம்பியா பல்கலைக்கழக பேராசிரியர் மஹ்மூத் மம்தானி.
*2018ஆம் ஆண்டு அமெரிக்க குடிமகன் ஆனார்.
*தெற்காசியாவில் இருந்து, உகாண்டா பின்னணியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் மேயர்.
*தீவிரமாக சமூக பணிகளில் ஈடுபட்டு வந்தார். ஃபோர்க்ளோஷர் கவுன்சிலராக இருந்தார்.
*நிதி நெருக்கடியால் தங்கள் வீடுகளை இழந்து தவித்து மக்களுக்கு போதிய உதவிகளை செய்து வந்தார்.
*இதன் தொடர்ச்சியாக அரசியலுக்குல் அடியெடுத்து வைத்தார்.
*நியூயார்க் மாகாண சட்டமன்றத்தில் முதல் சோஷலிச பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்டார்.
*நியூயார்க் நகரின் மேயர் பதவிக்கான வேட்பாளர் பட்டியலுக்கு நடைபெறும் முதன்மை போட்டியில் அனைவரையும் தோற்கடித்து ஆச்சரியம் அளித்தார்.
*ஜனநாயக கட்சி வேட்பாளராக நியூயார்க் நகர மேயராக தற்போது வெற்றி பெற்றுள்ளார்.
