டெல்லி : ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதலை நிறுத்துவதாக இந்தியா உறுதியளித்ததாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்த கருத்துக்கு இந்தியா திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தது. மேலும், "கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதியில் நுகர்வோருக்கு முன்னுரிமை அளிப்பதே எங்கள் கொள்கை. எரிசக்தி விலைகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட விநியோகங்களை உறுதி செய்தல், சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப அவை மாறுபடலாம்" என இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் விளக்கம் அளித்துள்ளார்.
+
Advertisement