நியூயார்க்: இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியது நான்தான் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால், பாகிஸ்தானுடனான போரை நிறுத்தியதில் மூன்றாம் நபரின் தலையீடு இல்லை என்று இந்தியா மறுத்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சியில் டிரம்ப் நேற்று முன்தினம் பேசியதாவது: உலக அரங்கில், மதிக்கப்படும் பல விஷயங்களை செய்கிறோம்.
சமாதான உடன்படிக்கைகளை ஏற்படுத்துகிறோம். இந்தியா-பாகிஸ்தான், தாய்லாந்து-கம்போடியா இடையேயான போர்களை நிறுத்தினோம். அர்மீனியா- அஜர்பைஜான், கொசோவோ- செர்பியா, இஸ்ரேல்- ஈரான், எகிப்து- எத்தியோப்பியா, ருவாண்டா- காங்கோ நாடுகள் இடையே எழுந்த போர்களை நாங்கள் நிறுத்தினோம். ரஷ்யா-உக்ரைன் மோதலை நிறுத்த முடிந்தால் நோபல் பரிசு கிடைக்கும் என்று என்னிடம் சொல்லப்பட்டது.
ஆனால் நான் 7 போர்களை நிறுத்தி இருக்கிறேன். ஒவ்வொன்றிற்கும் எனக்கு நோபல் பரிசு கிடைக்க வேண்டும் என்று நான் சொன்னேன்.ஆனால் ரஷ்யா-உக்ரைன் போரை நீங்கள் நிறுத்தினால் நோபல் பரிசு பெற முடியும் என்று சொன்னார்கள். அதையும் செய்து முடிப்பேன் என்றார்.