வாஷிங்டன்: டிரக்குகளுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். டிரக்குகளுக்கு விதிக்கப்பட்ட 25% வரி நவம்பர் 1ம் தேதி அமலுக்கு வரும் எனவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான சமூக வலைதள பதிவில், “நவம்பர் 1ம் தேதி தொடங்கி வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து நடுத்தர மற்றும் கனரக ட்ரக்குகள் மீதும் 25 சதவிகிதம் வரி விதிக்கப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே, ட்ரக்குகள் மீதான புதிய வரிகள் கடந்த 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவித்திருந்த நிலையில், தற்போது புதிய வரிகள் நவம்பர் 1 முதல் அமலுக்கு வரும் என அறிவித்துள்ளார். உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் விதமாக, இறக்குமதி பொருட்களின் மீது இந்த வரி விதிப்பு நடவடிக்கையை ட்ரம்ப் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.