அகர்தலா: மேற்கு திரிபுராவின் பிரதாப்கர் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் மீது புல்டோசரை மோதி சேதப்படுத்தி விட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டி உள்ளது.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஜிதேந்திர சவுத்ரி கூறுகையில், “நேற்று அதிகாலை 1.30 மணிக்கு எங்கள் கட்சி அலுவலகம் மீது பாஜ ஆதரவு பெற்ற குண்டர்கள் புல்டோசர் மூலம் மோதி சேதப்படுத்தினர்” என்று குற்றம்சாட்டினார்.