திருச்சி: தவெக தலைவர் நடிகர் விஜய் திருச்சியில் நாளை(13ம் தேதி) பிரசார சுற்றுப்பயணத்தை துவக்குகிறார். பிரசாரத்தில் கலந்து கொள்ள விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வருகிறார்.
காலை 10.45 மணியளவில் மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகே நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். பின்னர் அவர் சாலை மார்க்கமாக சென்று அரியலுார் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேசுகிறார். பின்னர் சென்னை புறப்பட்டு செல்கிறார்.