திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு
திருச்சி: திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. தந்தை பெரியார் பிறந்த நாள் தமிழக அரசு சார்பில் சமூகநீதி நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் சுயமரியாதை, ஆளுமை திறன், பகுத்தறிவு பார்வை கொண்டதாக செயல்பாடுகள் அமையும் என உறுதிமொழி ஏற்கப்பட்டது. சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் கொள்கைகளுக்காக ஒப்படைப்பேன் என உறுதிமொழி ஏற்றனர். நிகழ்வில் அமைச்சர்கள், எம்பிக்கள், 2000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பங்கேற்று உறுதிமொழி ஏற்றனர்.