திருச்சி: திருச்சி மத்திய சிறையில் டிஐஜி முன்பு கைதிகள் மோதிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், 2 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக 13 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளன. திருச்சி மத்திய சிறைத்துறை டிஐஜி பழனி மற்றும் சிறை அதிகாரிகள் கடந்த 4ம் தேதி 12வது பிளாக் மற்றும் 13,14வது பிளாக் கைதிகளிடம் குறைகளை கேட்டுக் கொண்டிருந்தனர். 12-வது பிளாக்கில் மயிலாடுதுறையை சேர்ந்த கைதிகள் உள்ளனர். 14வது பிளாக்கில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் உள்ளனர். இதில் 12,13,14-வது பிளாக் கைதிகளிடம் குறைகளை கேட்டபோது, திடீரென கைதிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதில், நெல்லை நாங்குநேரியை சேர்ந்த கைதி சிவசுப்பு(25), ராமநாதபுரம் மரவெட்டியை சேர்ந்த தேவா(33) ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இது குறித்து சிறைத்துறை அதிகாரி விவேக் அளித்த புகாரின் பேரில் கே.கே. நகர் போலீசார் 13 கைதிகள் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement

