Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

13ம் தேதி திருச்சியில் தொடங்குகிறார் நடிகர் விஜய் தேர்தல் பிரசாரம்: 3 மாதங்களில் 16 நாட்கள் மட்டும் சுற்றுப்பயணம்

சென்னை: ஒரே நாளில் 3 முதல் 4 மாவட்டங்களில் த.வெ.க. தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வகையில் தேர்தல் பிரசாரம் திட்டமிடப்பட்டுள்ளது. 3 மாதங்களில் 16 நாட்கள் மட்டும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி அரசியல் கட்சிகள் பணியாற்றி வருகின்றன. மேலும் அரசியல் தலைவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், ‘மக்களை மீட்போம்’ என்ற தலைப்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் நேற்று முதல் காஞ்சிபுரத்தில் இருந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளார். இதனிடையே, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வருகிற 13ம் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 20ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதன்படி திருச்சியில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை தொடங்க காவல்துறையிடம் அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், த.வெ.க. தலைவர் விஜய் எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த தினங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என்பது தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, ஒரே நாளில் 3 முதல் 4 மாவட்டங்களில் த.வெ.க. தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. 3 மாதங்களில் 16 நாட்கள் மட்டும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

அதன்படி, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும் விஜய், 15 சனிக்கிழமைகள் மற்றும் ஒரு ஞாயிற்றுக்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: செப்.13 - திருச்சி, பெரம்பலூர், அரியலூர். செப்.20 - நாகை, திருவாரூர், மயிலாடுதுறை. செப்.27 - திருவள்ளூர், வடசென்னை. அக்.4, அக்.5 - கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு.

அக்.11 - கன்னியாகுமாரி, நெல்லை, தூத்துக்குடி. அக்.18 - காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை. அக்.25 - தென் சென்னை, செங்கல்பட்டு. நவ.1 - கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர். நவ.8 - திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம். நவ.15 - தென்காசி, விருதுநகர். நவ.22- கடலூர். நவ.29- சிவகங்கை, ராமநாதபுரம். டிச.6 - தஞ்சாவூர், புதுக்கோட்டை. டிச.13 - சேலம், நாமக்கல், கரூர். டிச.20 - திண்டுக்கல், தேனி, மதுரை.

* சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும் விஜய், 15 சனிக்கிழமைகள் மற்றும் ஒரு ஞாயிற்றுக்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொள்வார்