திருச்சி: திருச்சி சிறுகனூர் அருகே நகை வியாபாரியை வழிமறித்து 10 கிலோ தங்க நகைகள் கொள்ளையடித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். தங்க நகைகளை கொள்ளையடித்த 3 பேரை ராஜஸ்தானில் தனிப்படை போலீசார் கைதுசெய்தனர். சென்னை சவுகார்பேட்டை ஆர்.கே.ஜூவல்லரி மேலாளர், கடந்த ஞாயிறன்று திண்டுக்கல்லில் நகைகள் விற்றுள்ளார். திண்டுக்கல்லில் நகைகளை விற்று எஞ்சிய 10 கிலோ தங்கத்தை எடுத்து வந்தபோது பின் தொடர்ந்து வந்த மர்ம கும்பல் கொள்ளை அடித்தது. காரை வழிமறித்த மர்மநபர்கள் மிளகாய் பொடி தூவி கொள்ளையடித்தனர். 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
+
Advertisement