திருச்சி: திருச்சி விமான நிலையத்திலிருந்து சார்ஜாவுக்கு 182 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் நேற்று அதிகாலை 4.45 மணிக்கு புறப்பட்டது. அப்போது, ‘டேக் ஆப்’ ஆவதற்கு முன்பே விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து விமான நிலைய அதிகாரிகள் உத்தரவின்பேரில் ஓடு பாதையிலேயே விமானம் திடீரென நிறுத்தப்பட்டது.
தொழில்நுட்ப வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்தனர். இதனால் காத்திருப்போர் அறையில் பயணிகள் தங்க வைக்கப்பட்டனர். பின்னர், மதியம் 2.45 மணியளவில் மாற்று விமானத்தில் 182 பயணிகளும் சார்ஜாவுக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர். விமானம் டேக் ஆப் ஆவதற்கு முன்பே, தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் 182 பயணிகள் உயிர் தப்பினர்.