திருச்சி: திருச்சியில் மின்சார வசதியின்றி மக்கள் தவித்து வருவதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வலுத்துள்ளது. திருச்சி அருகே உள்ள நந்தவனம் பகுதியில் 15 ஆண்டுகளுக்கு மேலாக 50க்கு மேற்பட்ட குடும்பங்கள் மின்சார வசதியின்றி அல்லல் பட்டு வருகின்றனர்.
முறையான ஆவணங்களுடன் விண்ணப்பித்தும் கோயில் நிலத்தில் வசிப்பதாக கூறி மின் இணைப்புத் தர மின்சார வாரியம் மறுப்பதாக கூறப்படுகிறது. இதனால் மாலை 6 மணிக்கு மேல் தங்களின் அன்றாட பணிகள் பாதிக்கப்படுவதாக மக்கள் குற்றசாட்டி உள்ளனர். பல ஆண்டுகளாக மின் இணைப்பு வழங்கப்படாதது பற்றி உதவி மின் பொறியாளரிடம் கேட்டபோது கோயில் அனுமதி இல்லாமல் மின் இணைப்பை கொடுக்க இயலாது என்று தெரிவித்துள்ளார்.