Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருச்சி ஆயுத தொழிற்சாலையில் வேலை

பணி: டிரேட்ஸ்மேன். மொத்த காலியிடங்கள்: 73.

டிரேடு வாரியாக காலியிடங்கள் விவரம்:

1. டர்னர்: 4 இடங்கள் (பொது-4, ஒபிசி-1, எஸ்சி-1)

2. பிட்டர் (எலக்ட்ரானிக்ஸ்): 6 இடங்கள் (பொது-4, ஒபிசி-1, எஸ்சி-1)

3. கிரைண்டர்: 8 இடங்கள் (பொது-5, ஒபிசி-2, எஸ்சி-1)

4. மெஷினிஸ்ட்: 24 இடங்கள் (பொது-12, ஒபிசி-6, எஸ்சி-4, பொருளாதார பிற்பட்டோர்-2). இவற்றில் ஓரிடம் மாற்றுத்திறனாளிக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

5. பெயின்டர்: 3 இடங்கள் (பொது). இவற்றில் ஓரிடம் முன்னாள் ராணுவத்தினருக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

6. வெல்டர்: 3 இடங்கள் (பொது).

7. கெமிக்கல் புராசஸ் வொர்க்கர்: 3 இடங்கள் (பொது)

8. எலக்ட்ரோ பிளேட்டர்: 3 இடங்கள் (பொது)

9. எக்ஸாமினர்: 8 இடங்கள் (பொது-5, ஒபிசி-2, எஸ்சி-1). இவற்றில் 4 இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

10. ஒஎம்ஹெச்இ: 1 இடம் (பொது). இந்த இடம் முன்னாள் ராணுவத்தினருக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

11. மில்ரைட்: 2 இடங்கள் (பொது)

12. எலக்ட்ரீசியன்: 4 இடங்கள் (பொது-3, ஒபிசி-1)

13. பிட்டர் (ஜி): 1 இடம் (பொது). இந்த இடம் முன்னாள் ராணுவத்தினருக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

14. பிட்டர் (ரெப்ரிஜிரேஷன்): 1 இடம் (பொது).

வயது: 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி/ஒபிசி/ மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு ஒன்றிய அரசின் விதிமுறைப்படி அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

சம்பளம்: ரூ.19,900- ரூ.30,845.

தகுதி: குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பாடப்பிரிவுகள் ஏதாவது ஒன்றில் ஐடிஐ படிப்பை முடித்து அப்ரன்டிஸ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.வெல்டர் பிரிவுக்கு 8ம் வகுப்பு படித்து ஐடிஐ படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். எக்ஸாமினர் பிரிவுக்கு பிட்டர்/மெஷினிஸ்ட்/டர்னர்/ கிரைண்டர் ஆகிய ஏதாவதொரு டிரேடில் ஐடிஐ படித்திருக்க வேண்டும்.ஓஎம்ஹெச்இ பிரிவுக்கு கிரேன் ஆபரேட்டர் டிரேடில் ஐடிஐ படிப்பை முடித்து ஹெச்எம்வி உரிமம் பெற்றிருக்க வேண்டும்.ஐடிஐ படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் மற்றும் டிரேடு டெஸ்ட்டில் பெறும் மதிப்பெண்கள் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். www.awell.in/notices என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

பிரின்ட் அவுட் அனுப்ப வேண்டிய முகவரி:

தலைமை பொது மேலாளர், ஆயுத தொழிற்சாலை,

திருச்சி, தமிழ்நாடு- 620 016.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.09.2025.

பிரின்ட் அவுட் அனுப்ப கடைசி நாள்: 29.09.2025.