திருச்சிராப்பள்ளி: திருச்சி பீமநகரில் தாமரைச்செல்வன் என்ற இளைஞர் படுகொலை சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தாக்க வந்தவர்களிடமிருந்து தப்பிக்க காவலர் குடியிருப்புக்குள் நுழைந்த இளைஞர் படுகொலை சம்பவமானது நிகழ்ந்து இருக்கிறது. திருச்சி, பீமநகர் பகுதியில் இன்று காலையில் அதே பகுதியை சேர்ந்த 25 வயது தாமரைச்செல்வன் என்ற இளைஞரை 5 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மேலும் இந்த சம்பவமானது பீமநகரில் இருக்கக்கூடிய காவல் குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
அந்த சம்பவம் நடைபெற்றுவிட்டு தப்பி ஓடியபோது 5 பேரில் ஒருத்தரை பொதுமக்களே பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர். அந்த இளைஞரை காவல் துறையினர் தீவிரமாக வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், தாமரைச்செல்வன் என்பவர் ரியல் எஸ்டேட் பணிகள் மேற்கொண்டு வருவதால் முன்விரோதம் இருந்ததா அல்லது ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் காவல் துறை குடியிருப்புக்குள் நடைபெற்றதால் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காவல் துறை, கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

