புதுடெல்லி: முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுகானின் பதவிக் காலத்தை நீட்டித்து ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. முப்படைகளின் தலைமைத் தளபதியாக அனில் சவுகான் இருந்து வருகிறார். இவரது 3 ஆண்டு பதவிக் காலம் செப்டம்பர் 30ம் தேதியுடன் நிறைவடைய இருந்தது. இந்த நிலையில் முப்படைகளின் தலைமைத் தளபதியின் பதவிக் காலத்தை 2026ம் ஆண்டு மே 30ம் தேதி வரை அல்லது மறு உத்தரவு வரும் வரை நீட்டிப்பதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
+
Advertisement