திருவனந்தபுரம்: திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்தின் பதவிக்காலம் வரும் 13ம் தேதியுடன் முடிவடைகிறது. இவரது பதவியை நீட்டிக்க கேரள அரசு ஆலோசித்தது. ஆனால் சபரிமலையில் தங்கம் திருட்டு தொடர்பாக தற்போதைய தேவசம் போர்டின் நடவடிக்கையிலும் சந்தேகம் இருப்பதாக கேரள உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது. இதனால் பிரசாந்தின் பதவிக்காலத்தை நீட்டிக்க கேரள உயர்நீதிமன்றம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில் தலைவர் பதவிக்கு முன்னாள் தலைமைச் செயலாளரான கே. ஜெயகுமாரை நியமிக்க கேரள அரசு தீர்மானித்தது. இதற்கான உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டது. மேலும் தேவசம் போர்டு புதிய உறுப்பினராக முன்னாள் அமைச்சர் கே. ராஜு நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களது பதவிக்காலம் 2 ஆண்டுகள் ஆகும். 1978ம் ஆண்டு கேரள கேடர் ஐஏஎஸ் அதிகாரியான ஜெயகுமார் 2012ம் ஆண்டு தலைமைச் செயலாளராக இருந்து ஓய்வு பெற்றவர்.

