Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

போக்குவரத்து துறை தனியார் மயமாக்கப்படாது: அமைச்சர் சிவசங்கர் உறுதி

மார்த்தாண்டம்: ‘தமிழகத்தில் போக்குவரத்து துறை தனியார் மயமாக்கப்படாது’ என அமைச்சர் சிவசங்கர் கூறினார். கன்னியாகுமரி மாவட்ட போக்குவரத்து துறை சார்பில் 24 புதிய பஸ்களின் சேவை துவக்க விழா மார்த்தாண்டம் பஸ் ஸ்டாண்டில் நேற்று நடந்தது. பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில், இதனை துவக்கி வைத்து அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது: கலைஞர் ஆட்சியில் 15 ஆயிரம் பஸ்கள் வாங்கப்பட்டன. அதன் பிறகு தான் போக்குவரத்து துறை வலுவடைந்தது. ஆனால் அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளாக 10 ஆயிரம் பஸ்கள் மட்டுமே வாங்கப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியின் கடன் சுமை, கொரோனா நெருக்கடி, நிதி பற்றாக்குறை என பல்வேறு கட்டங்களை கடந்து புதிய பஸ்கள் இயக்கப்பட உள்ளது. சில மாநிலங்களில் இரண்டு மூன்று மாதங்களாக போக்குவரத்து ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. ஓய்வூதியம் முறையாக வழங்கப்படவில்லை. நமது மாநிலத்தில் வழங்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து கழகத்தில் போதுமான டிரைவர்கள், கண்டக்டர் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இந்த துறை எந்த காரணத்தினாலும் தனியார் மயமாக்கப்படாது. அதனால்தான் 7500 பஸ்கள் புதிதாக வாங்கப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் கூறினார்.