கோபி: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தாரமங்கலத்தை சேர்ந்தவர் சரவணகுமார் (32). ஜவுளி கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் சேலம் மாவட்டம் மணியனூரைச் சேர்ந்த திருநங்கையான சரோ (30) என்பவர் வேலை செய்தார். அப்போது சரவணகுமாருக்கும், சரோவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, இரு வீட்டார் சம்மதத்தடன் இருவருக்கும் கோபியில் உள்ள மனிதம் சட்ட உதவி மையம், பெரியார் சுயமரியாதை திருமண நிலையத்தில் நேற்று முன்தினம் சுயமரியாதை திருமணம் நடைபெற்றது. இதில் உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
+
Advertisement