டெல்லி: திருநங்கையருக்கு சமவேலைவாய்ப்பு சமமருத்துவ சேவை கிடைப்பது உறுதி செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குஜராத் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 2 தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியில் சேர்ந்தவர்களை திருநங்கையர் என்று தெரிந்த பிறகு பணியில் இருந்து நீக்கி உள்ளனர்.
இந்த நடவடிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பரிதிவாலா, விஸ்வநாதன் அமர்வு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியுள்ளது. திருநங்கையர் எதிர்காலத்தை பாதுகாப்பது முக்கியம் என்ற தெரிவித்த நீதிபதிகள் அதற்கான பரிந்துரைகள் வழங்க டெல்லி உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆஷாமேனன் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. இந்த குழுவில் தமிழ்நாட்டை சேர்ந்த நிருநங்கை கிரேஸ் பானு, உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஜெய்னா கோத்தாரி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த குழு திருங்கையருக்கான நீண்டகால பாதுகாப்பு திட்டங்களை வகுக்க வேண்டும் திருநங்கையர் பாதுகாப்பு சட்டம் 2019ன் படி உரிய கொள்கை திட்டத்தை வகுக்க வேண்டும். திருநங்கையருக்கு பாலின பாகுபாடு இல்லாமல் அனைத்து உரிமைகளும் கிடைக்கும் வகையில் அதனை உருவாக்க வேண்டும் என்பது உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாடுமுழுவதும் திருநங்கையர் உரிமைகளை மேலும் வலுப்படுத்த இது உதவும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.