Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கறவை மாடுகள் வளர்ப்பில் மதிப்பு கூட்டப்பட்ட பொருள் விற்பனை குறித்து பயிற்சி

*இளம் விவசாயிகள் பங்கேற்பு

மன்னார்குடி : வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் இளம் விவசாயிகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியில் 300 பேர்கள் பங்கேற்றனர்.தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் மகேஷ் அறிவுறுத்தலின் பேரில் ,வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் இளம் விவசாயி களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி கொற்கை கால்நடைப் பண்ணைதுணை இயக்குனர் டாக்டர் மோகன் தலைமையில் மன்னார்குடி கால்நடை மருத்துவ மனை வளாகத்தில் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து, ஆறு மாதங்களுக்கு நடைபெறும் இந்த பயிற்சி முகாம் மூலம் 300 பேர்கள் பயன் பெறுவார்கள்.

பயிற்சியின் ஒரு பகுதியாக, லாபகரமான முறையில் கறவை மாடுகள் வளர் ப்பில் பால் மட்டுமே விற்பனை செய்து ஈட்டும் வருவாய் மட்டும் அல்லாமல் சாணம், சிறுநீர் மற்றும் பாலிலிருந்து கிடைக்கும் பொருட்களை மதிப்பு கூட்ட ப்பட்ட பொருட்களாக தயாரித்து விற்பனை செய்து அதிக பலன் பெறும்வகை யில் ஒரு நாள் சிறப்பு வகுப்பு பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் பால் பண்ணையில் வழங்கப்பட்டது.

மேலும், சாணத்தில் இருந்து தயாரிக்க அக்குபஞ்சர் காலனி, கைபேசியில் இருந்து வெளிப்படுகின்ற கதிர் வீச்சை தடுக்கக்கூடிய பாதுகாப்பு அரண்கள், சாம்பிராணி, பத்தி, திருநீர், அகல்விளக்குகள், வறட்டிகள் தயாரித்தல் குறித்து ம், நாட்டு பசுவின் சிறுநீரை கொண்டு தயாரிக்க கூடிய பஞ்சகாவியா, மீன் அமிலம் மற்றும் பூஜைகளுக்கு பயன்படுத்தக்கூடிய கோமியம் போன்ற தயாரிப்புகள் குறித்தும் பயிற்சியாளர்களுக்கு நேரடியாக பயிற்று விக்கப் பட்டது.

பயிற்சியில், மன்னார்குடி கால்நடை மருத்துவமனை உதவி இயக்குனர் டாக் டர் மகேந்திரன், தீவன அபிவிரு த்தி மற்றும் கால்நடை பெருக்கம் துணை இயக்குனர் டாக்டர் தமிழரசு, கொற்கை கால்நடைப் பண்ணை துணை இயக்குனர் டாக்டர் மோகன், கால்நடை உதவி மருத்துவர்கள் சுகந்தி, பிரசாந்தினி, யாழினி ஆகியோர் கலந்து கொண்டனர்.